வைகாசி விசாக திருவிழாவையொட்டி சேலம் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


வைகாசி விசாக திருவிழாவையொட்டி சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்

சேலம்:

வைகாசி விசாக திருவிழாவையொட்டி சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாகம்

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்தார். இதையொட்டி வைகாசி விசாக விழா முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளுடன் நடைபெறும்.

அதன்படி வைகாசி விசாக திருவிழாவையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் சுப்பிரமணிய சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

முருகன் கோவில்

இதேபோல் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மாலையில் தங்ககவசம் அணிவிக்கப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் நடந்த பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கிச்சிப்பாளையம் சுப்பிரமணிய சாமி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி வள்ளி, தெய்வானையுடன், முருகன் வெள்ளிகவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஊத்துமலை முருகன் கோவில், கந்தாஸ்ரமம் கோவில், குமரகிரி தண்டாயுதபாணி கோவில் உள்பட சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவிலில் நேற்று வைகாசி விசாக திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.


Next Story