யானை செங்கமலத்துக்கு பழங்கள், காய்கறிகள் வைத்து சிறப்பு பூஜை


யானை செங்கமலத்துக்கு பழங்கள், காய்கறிகள் வைத்து சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 19 Sept 2023 12:15 AM IST (Updated: 19 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் யானை செங்கமலத்துக்கு பழங்கள், காய்கறிகள் வைத்து சிறப்பு பூஜை

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் செங்கமலம் யானை பாப் கட்டிங் அலங்காரத்துடன் உள்ளதால் பாப் கட்டிங் செங்கமலம் என புகழ் பெற்று விளங்குகிறது. நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செங்கமலம் யானைக்கு கரும்பு, வாழைப்பழம், உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் வைத்து படையலிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ராஜகோபாலசாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் மற்றும் அறங்காவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு செங்கமலம் யானையை வணங்கி சென்றனர்.


Next Story