சேலம் வழியாக திருவனந்தபுரம்-சென்னை இடையே சிறப்பு ரெயில்


சேலம் வழியாக திருவனந்தபுரம்-சென்னை இடையே சிறப்பு ரெயில்
x

சேலம் வழியாக திருவனந்தபுரம்-சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சேலம்

சூரமங்கலம்:

சிறப்பு ரெயில்

கோடை காலத்தில் ரெயில்களில் கூட்ட நெரிசலை தடுக்க திருவனந்தபுரத்தில் இருந்து சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி திருவனந்தபுரம்-சென்னை சிறப்பு ரெயில் (வண்டி எண் 06044) வருகிற மே மாதம் 3-ந் தேதி முதல் ஜூன் மாதம் 28-ந் தேதி வரை புதன்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது. 3-ந் தேதி இரவு 7.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து இந்த ரெயில் புறப்பட்டு கொல்லம், செங்கனூர், கோட்டையம், எர்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 6.52 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 6.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக மதியம் 12.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடையும்.

A special train runs between Thiruvananthapuram and Chennai via Salem.

இதேபோல் மறு மார்க்கத்தில் சென்னை-திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (06043) மே மாதம் 4-ந் தேதி முதல் ஜூன் மாதம் 29-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 4-ந் தேதி மதியம் 2.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 7.22 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மறுநாள் காலை 6.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story