ஆன்மிக சுற்றுலா ரெயில் புதுக்கோட்டையை கடந்து சென்றது


ஆன்மிக சுற்றுலா ரெயில் புதுக்கோட்டையை கடந்து சென்றது
x

டெல்லியில் இருந்து ராமேசுவரத்திற்கு ஆன்மிக சுற்றுலா ரெயில் புதுக்கோட்டையை கடந்து சென்றது.

புதுக்கோட்டை

புதுடெல்லியில் இருந்து ராமேசுவரத்திற்கு ராமாயண யாத்ரா எனும் ஆன்மிக சிறப்பு ரெயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புறப்பட்டது. இதில் முக்கிய பிரமுகர்கள் உள்பட பக்தர்கள் 300-க்கும் மேற்பட்டோர் இதில் பயணம் செய்கின்றனர். இந்த ரெயில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை நேற்று பகல் 12.20 மணி அளவில் கடந்து ராமேசுவரத்திற்கு சென்றது. இந்த ரெயில் வருகையையொட்டி ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ரெயில் ராமேசுவரத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு புறப்பட்டு டெல்லி நோக்கி செல்கிறது. செல்லும் வழியில் ஒரு சில இடங்களில் ஆன்மிக தரிசனத்திற்கு நின்று செல்வதாக கூறப்படுகிறது.


Next Story