ஆற்காடு அருகே அனுமதியின்றி அம்பேத்கர் சிலை அமைத்ததால் பரபரப்பு
ஆற்காடு அருகே அனுமதியின்றி அம்பேத்கர் சிலை அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
ஆற்காடு
ஆற்காடு அருகே அனுமதியின்றி அம்பேத்கர் சிலை அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அனுமதியின்றி 2½ அடி உயரத்தில் செயற்கை இழையினால் செய்யப்பட்ட அம்பேத்கர் சிலையை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் புதிதாக அமைத்தனர்.
தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிலையை எடுக்கும்படி கூறினர். மேலும் முறையாக அனுமதி பெற்று வெண்கலத்தினால் ஆன சிலையை அமைக்கும்படி ஆலோசனை வழங்கினர். அதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலையை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story