தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய இலங்கை படகு


தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய இலங்கை படகு
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இலங்கை பிளாஸ்டிக் படகு கரை ஒதுங்கி கிடந்தது. அதில் தங்கக்கட்டிகள் கடத்தி வந்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

தனுஷ்கோடி

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இலங்கை பிளாஸ்டிக் படகு கரை ஒதுங்கி கிடந்தது. அதில் தங்கக்கட்டிகள் கடத்தி வந்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கரை ஒதுங்கிய படகு

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனையை அடுத்த வடக்கு கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் படகு ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக மீனவர்கள் மூலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்பிரிவு கடலோர போலீசார் மற்றும் சுங்கத்துறையினர் அங்கு விரைந்து சென்று, கரை ஒதுங்கி கிடந்த படகை பார்வையிட்டனர்.

அந்த படகில் 9.9 குதிரை திறன் கொண்ட என்ஜின், சுமார் 20 லிட்டர் மண்எண்ணெய், மீன்பிடி வலை, மீன்களுக்கான பெட்டி ஆகியவை இருந்தன.

தங்கக்கட்டிகள் கடத்தலா?

அந்த படகின் முன்பகுதியில் ஓ.எப்.ஆர்.பி.-ஏ-7069 சி.எச்.டபிள்யூ. என்ற பதிவெண் எழுதப்பட்டுள்ளது. அந்த எண்ணை வைத்து விசாரித்ததில் இந்த படகு இலங்கை யாழ்ப்பாணம் அனலை தீவு பகுதியை சேர்ந்தது என்று தெரியவந்தது. இந்த படகை யாரேனும் திருடி வந்து நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்களா அல்லது கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றால் நங்கூரம் அறுந்து காற்றின் வேகத்தில் அடித்து வரப்பட்டு தனுஷ்கோடியில் கரை ஒதுங்கியதா? அல்லது கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகளை கடத்தி வந்து படகை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story