12-ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் ஒருவன் தாலி கட்டிய காட்சி...! சமூக வலைத்தளங்களில் வைரல்
சிதம்பரம் பஸ் நிலைய நிழற்குடையில் 12-ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் ஒருவன் தாலி கட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வதற்காக சிற்றுந்து பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்குள்ள நிழற்குடையில் பள்ளி சீறுடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு மாணவர் ஒருவன் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டியுள்ளார்.
இதனை உடன் இருந்த மாணவன் ஒருவன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் கட்டுயா... கட்டுயா என்று கூற.. மாணவனும் மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். அப்போது பூவிற்கு பதிலாக காகிதங்களை கிழித்து இருவர் மீதும் வீசியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதில் மாணவி 12-ம் வகுப்பு படிப்பதும், தாலி கட்டிய மாணவன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.