நடுரோட்டில் ஆபாசமாக திட்டி மானபங்கப்படுத்தியதால் மாணவி, விஷம் குடித்து தற்கொலை முயற்சி


நடுரோட்டில் ஆபாசமாக திட்டி மானபங்கப்படுத்தியதால் மாணவி, விஷம் குடித்து தற்கொலை முயற்சி
x

நடுரோட்டில் ஆபாசமாக திட்டி மானபங்கப்படுத்தியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுதொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் ஆலடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது குடும்பத்திற்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பாரதி என்பவரது குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி, கொட்டாரங்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றதாக தெரிகிறது. வீட்டின் அருகில் சென்ற போது பாரதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் முன்விரோதம் காரணமாக மாணவியை ஆபாசமாக திட்டி மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி

இதில் மனமுடைந்த மாணவி, விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாரதி உள்ளிட்ட 5 பேர் மீது ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபாசமாக திட்டி மானபங்கப்படுத்தியதால் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story