நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை முயற்சி
நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலைக்கு முயன்றார்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி சமீபத்தில் நடந்த நீட் தேர்வினை எழுதி இருந்ததாகவும், அதில் மதிப்பெண் குறைந்து விடும் என்ற பயத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த மாணவி அரளி விதையை அரைத்து தின்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை முடிவு எடுத்தாரா? அல்லது உடல் நிலை சரியில்லாதது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story