திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை பஞ்சாயத்து நிதிக்கு வழங்கிய மாணவி


திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை பஞ்சாயத்து நிதிக்கு வழங்கிய மாணவி
x

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை பஞ்சாயத்து நிதிக்கு மாணவி வழங்கினார்.

திருநெல்வேலி

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே செட்டிகுளத்தில் வி.பி.என். மோட்டார் நிறுவனத்தைச் சேர்ந்த பொன்குமார் மகள் ரிஷாலி, அஞ்சுகிராமம் ஜான்ஸ் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதில் அவருக்கு கிடைத்த ரூ.10 ஆயிரத்தை செட்டிகுளம் பஞ்சாயத்துக்கு நிதியாக வழங்கினார். அதனை பஞ்சாயத்து தலைவர் அம்மா செல்வகுமார் பெற்றுக்கொண்டார். திருக்குறள் போட்டியில் வென்றதால் கிடைத்த பணத்தை பஞ்சாயத்து நிதிக்கு வழங்கிய மாணவியை பஞ்சாயத்து தலைவர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story