மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்த மாணவர், வாகனம் மோதி பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்த மாணவர், வாகனம் மோதி பலி
x

அருப்புக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்த மாணவர் மீது வாகனம் மோதியதில் அவர் பலியானார். மற்ெறாருவர் படுகாயம் அடைந்தார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்த மாணவர் மீது வாகனம் மோதியதில் அவர் பலியானார். மற்ெறாருவர் படுகாயம் அடைந்தார்.

என்ஜினீயரிங் மாணவர்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்தவர் காளிராஜ். இவருடைய மகன் மாரிக்கண்ணன் (வயது 21). இவர் கோவில்பட்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருைடய நண்பர் ஆனந்த ரூபன் (19).

இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மாரிக்கண்ணன் ஓட்டினார். தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலை ராமநாயக்கன்பட்டி விலக்கு அருகே வந்தபோது, சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கியதில் நிலை தடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர்.

பரிதாப சாவு

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் சக்கரம் ஏறி இறங்கியதில் மாரிக்கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ஆனந்த ரூபன் படுகாயம் அடைந்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் பதறியபடி ஓடிவந்து ஆனந்தரூபனை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும், அதன் டிரைவரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.


Related Tags :
Next Story