மகாபாரதத்தை 48 மணி நேரம் தொடர்ந்து எழுதி சாதனை படைத்த மாணவி


மகாபாரதத்தை 48 மணி நேரம் தொடர்ந்து எழுதி சாதனை படைத்த மாணவி
x

மகாபாரதத்தை 48 மணி நேரம் தொடர்ந்து எழுதி சாதனை படைத்த மாணவி கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி அருகே தும்மனாட்டி மோரிகல் பகுதியை சேர்ந்தவர் அபிநயா. இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து, கடந்த மே மாதம் தனியார் கல்லூரியில் நடந்த போட்டியில் கலந்துகொண்டு மகாபாரதத்தை 48 மணி நேரம் 35 நிமிடங்கள் தொடர்ச்சியாக எழுதி சாதனை படைத்தார். இதனை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு அங்கீகரித்து, தற்போது மாணவிக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்தநிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் அம்ரித்தை, மாணவி அபிநயா சந்தித்து சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து மாணவி கூறும்போது, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு சாதனையை அங்கீகரித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் மேலும் சாதனைகள் படைக்க முயற்சிப்பேன் என்றார்.


Next Story