தூத்துக்குடியில்34 மணி நேரம் சுருள்வாள் சுற்றி மாணவன் சாதனை


தூத்துக்குடியில்34 மணி நேரம் சுருள்வாள் சுற்றி மாணவன் சாதனை
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்34 மணி நேரம் சுருள்வாள் சுற்றி மாணவன் சாதனை படைத்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தேவராஜ் வஸ்தாவிசிலம்பாட்ட கழகம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக்காக 34 மணி நேரம் சுருள்வாள் சுற்றும் சாதனை நிகழ்ச்சி தூத்துக்குடி சவேரியார்புரத்தில் நடந்தது. இதில் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஹரிஷ் பாக்கியராஜ் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் கடந்த 10-ந் தேதி இரவு 10 மணிக்கு சுருள்வாள் சுற்ற தொடங்கினார். தொடர்ந்து அவர் 34 மணி நேரம் சுருள்வாள் சுற்றி சாதனை படைத்தார். இந்த நிகழ்வு ஜாக்கி புக்ஆப் ரெக்கார்டு அமைப்பு சார்பில் பதிவு செய்யபட்டது. மேலும் தூத்துக்குடியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் பியர்சன் 12 மணி நேரம் வேல்கம்பு சுற்றினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை படைத்தவர்களுக்கான பரிசு வழங்கும் விழா நேற்று மாலை சவேரியார்புரம் ஆர்.சி.உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவுக்கு ஊர் நிர்வாகி பிரான்சிஸ் தலைமை தாங்கினார். பங்கு தந்தை குழந்தை ராஜன், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், யூனியன் கவுன்சிலர் தனுஷ்பாலன், சிலம்பாட்ட கழக ஒருங்கிணைப்பாளர் அருள் அந்தோணி ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் மாணவனின் பெற்றோர் சத்தியநாதன், பத்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story