புளியமங்களம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற புறநகர் ரெயில்


புளியமங்களம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற புறநகர் ரெயில்
x

புளியமங்களம் ரெயில் நிலையத்தில் புறநகர் ரெயில் நிற்காமல் சென்றது. இதனால் டிரைவருடன், பயணிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

நிற்காமல் சென்ற ரெயில்

சென்னை வேளச்சேரியில் இருந்து திருத்தணி வரை செல்லும் விரைவு புறநகர் ரெயிலில் திருத்தணி, அரக்கோணம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சென்னையின் பல இடங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், வேலை முடிந்து சென்னை கடற்கரை, ராயபுரம், வண்ணாரபேட்டை, பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர் மற்றும் ஆவடி ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு விரைவு புறநகர் ரெயில் புளியமங்களம் ரெயில் நிலையம் வந்த போது அந்த நிறுத்தத்தில் ரெயில் நிற்காமல் சென்றது.

வாக்குவாதம்

இதனால் ரெயிலில் இருந்த பயணிகள், வேலை முடிந்து வீடு திருப்பும் தொழிலாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.

அப்போது ரெயில் இருந்து இறங்கிய பயணிகளும், தொழிலாளர்களும் புளியமங்களம் ரெயில் நிலையத்தில் நிற்காதது குறித்து ரெயில் டிரைவர் மற்றும் கார்டு ஆகியோரிடம் வாக்கு வாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் வெங்கடேசன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசி சமாதானம் செய்தனர். இதனையடுத்து பயணிகள் கலைந்து சென்றனர். இதனால் ரெயில் சுமார் 20 நிமிடம் தாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து திருத்தணிக்கு சென்றது.


Next Story