தண்டவாளத்தில் திடீர் விரிசல்; 1½ மணி நேரம் ரெயில் தாமதம்


தண்டவாளத்தில் திடீர் விரிசல்; 1½ மணி நேரம் ரெயில் தாமதம்
x

தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் தேனிக்கு 1½ மணி நேரம் தாமதமாக பயணிகள் ரெயில் சென்றது.

மதுரை

செக்கானூரணி,

தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் தேனிக்கு 1½ மணி நேரம் தாமதமாக பயணிகள் ரெயில் சென்றது.

தண்டவாளத்தில் விரிசல்

மதுரையில் இருந்து தேனி வரை அகல ரெயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு, சில மாதங்களாக ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி மதுரையில் இருந்து ேதனிக்கு காலையிலும், தேனியில் இருந்து மாலையில் மதுரைக்கும் ெரயில் இயக்கப்படுகிறது.

நேற்று காலை மதுரையில் இருந்து தேனிக்கு பயணிகள் ரெயில் வழக்கம்போல் புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் காலை 8.30 மணிக்கு செக்கானூரணி அருகே சென்றது. அப்போது, பாறைப்பட்டியில் ரெயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டு இருந்ததை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து, ரெயில்வே ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக ரெயில் என்ஜின் டிைரவருக்கு தகவல் தெரிவித்ததால் அந்த ரெயில் பாறைப்பட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

1½ மணி நேரம் தாமதம்

பின்னர் ஊழியர்கள் தண்டவாள விரிசல் ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் 1½ மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. விரிசல் ஏற்பட்ட பகுதியில் அந்த ெரயில் மெதுவாக ஊர்ந்து சென்றது. தேனிக்கு தாமதமாக ரெயில் சென்றதால் அதில் பயணம் செய்த பயணிகள் அவதி அடைந்தனர்.


Next Story