மாற்றுத்திறனாளி திடீர் தர்ணா


மாற்றுத்திறனாளி திடீர் தர்ணா
x

மாற்றுத்திறனாளி திடீர் தர்ணா

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளியான நெல்சன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கலெக்டர் அலுவலகம் முன் சாலையோரம் அமர்ந்து கையில் பதாகை ஏந்தியபடி திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார்.

இதுபற்றி அவர் கூறும் போது 'நான் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வந்தேன். ஆனால் எனக்கு வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட பணப்பலன்கள் கல்லூரி நிர்வாகம் சார்பில் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை கல்லூரிக்கு சென்று கேட்டும் பணப்பலன்களை தரவில்லை. எனவே எனக்கான பணபலன்களை உடனடியாக வழங்க வேண்டும்' என்றார். இந்த தர்ணா போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் சென்று நெல்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து அங்கு ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.


Next Story