பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்


பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
x

சோளிங்கர் அருகே பொதுமக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே செங்கல் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தின் வழியாக சென்னை-பெங்களூரு சாலை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக ஓடைப்பகுதி அருகே 6 அடி உயர சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

உயரம் குறைவான சுரங்கப்பாதை அமைத்தால் ஓடை அருகே 300 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்திற்கு நெல் அறுவடை எந்திரம் மற்றும் டிராக்டர்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

எனவே சுரங்கப்பாதையை 17 அடி சுரங்கப்பாதையாக மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story