நரிக்குறவர்கள் திடீர் சாலை மறியல்


நரிக்குறவர்கள் திடீர் சாலை மறியல்
x

வாணியம்பாடி அருகே நரிக்குறவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

பஸ் நிற்காமல் சென்றது

ஆலங்காயம் பகுதியில் தங்கியுள்ள நரிக்குறவர் தம்பதியினர் தங்களது 3 குழந்தைகளுடன், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் வியாபாரத்திற்கு சென்றனர். பின்னர் நேற்று மாலை மீண்டும் ஆலங்காயம் செல்வதற்காக வாணியம்பாடி அருகே உள்ள செட்டியப்பனூர் பஸ் நிறுத்தத்தில் வாணியம்பாடி நோக்கி செல்வதற்காக நின்று இருந்தனர்.

அப்போது அந்த வழியாக திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சை நரிக்குறவர் தம்பதியினர் நிறுத்த முயன்றனர். ஆனால் அங்கே பஸ் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவ தம்பதியினர் சாலை அருகே இருந்த கற்களை எடுத்து சாலை நடுவில் அடுக்கி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாலுகா போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.

பின்னர் அவர்களை ஆட்டோவில் ஏற்றி வாணியம்பாடி பஸ் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவர்களிடம் பஸ் செலவுக்காக 200 ரூபாய் கொடுத்து ஆலங்காயம் செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


Next Story