குழந்தை தொழிலாளர்கள் குறித்து கடைகள், நிறுவனங்களில் திடீர் ஆய்வு
குழந்தை தொழிலாளர்கள் குறித்து கடைகள், நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி
உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் பகுதியில் கடை மற்றும் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளார்களா? என்பது குறித்து நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதில் குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரபு, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் பரிமளா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துனர் பரமேஸ்வரி, தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் இளங்கோவன், ஜெகதீஷ், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் இந்த ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story