கண்காணிப்பு கேமரா வழங்கும் நிகழ்ச்சி


கண்காணிப்பு கேமரா வழங்கும் நிகழ்ச்சி
x

ஏர்வாடியில் கண்காணிப்பு கேமரா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி ஏர்வாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏர்வாடியில் நடந்தது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, கண்காணிப்பு கேமராக்களை ஏர்வாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் அசோகன் ஆகியோரிடம் வழங்கினார்.

இந்த கண்காணிப்பு கேமராக்கள், ஏர்வாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட இருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் கக்கன், நகர காங்கிரஸ் தலைவர் ரீமாபைசல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story