பிராந்தியில் விஷம் கலந்து குடித்து இனிப்பு கடை உரிமையாளர் தற்கொலை
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து இனிப்பு கடை உரிமையாளர் தற்கொலை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள செட்டித்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தினேஷ்குமார்(வயது 28). இவர் அதே பகுதியில் இனிப்பு கடை நடத்தி வந்தார். மேலும் மோட்டார் வாகனங்களை வாங்கி மறு விற்பனையும் செய்து வந்தார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தினேஷ்குமார் கடந்த சில மாதங்களாக மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று தினேஷ்குமார் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து தினேஷ்குமாரின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.