கன்டெய்னர் லாரி மீது டேங்கர் லாரி மோதி விபத்து


கன்டெய்னர் லாரி மீது டேங்கர் லாரி மோதி விபத்து
x

வேலூரில் கன்டெய்னர் லாரி மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

வேலூர்

ஆந்திராவில் இருந்து சேலம் நோக்கி பால் லோடு ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. வேலூர் சேண்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது, டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில் டேங்கர் லாரியின் முன்பக்கம் முழுவதும் சேதமானது.

இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அங்கிருந்து கன்டெய்னர் லாரியை டிரைவர் எடுத்து சென்றுவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.


Next Story