தரைப்பாலத்தில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது


தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கூத்தாநல்லூர் அருகே தரைப்பாலத்தில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

கூத்தாநல்லூர்ூ

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கூத்தாநல்லூர் அருகே தரைப்பாலத்தில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

முக்கிய வழித்தடம்

கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கும்பகோணம் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி-கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.

தரைப்பாலம்

இந்த சாலையில் உள்ள நாகங்குடி என்ற இடத்தில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் பழுதடைந்ததால், அந்த பாலம் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக புதிய பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

ஆனால், புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலத்தின் மேல் மணல் கொட்டப்பட்டதால், மேடான பகுதியாகவும், மணல் பதிந்து சிறு,சிறு பள்ளங்கள் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.

தார்ச்சாலை அமைக்கப்பட்டது

தரைப்பாலத்தில் உள்ள சாலையை சீரமைத்து தார்ச்சாலையாக மாற்றித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து செய்தி படத்துடன் 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. அதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தரைப்பாலத்தில் தார்ச்சாலை அமைத்தனர்.

இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.


Next Story