தென்காசி: மீதி சில்லறை கேட்ட மதுப்பிரியர்! அடிக்க பாய்ந்த டாஸ்மாக் ஊழியர்


தென்காசி: மீதி சில்லறை கேட்ட மதுப்பிரியர்! அடிக்க பாய்ந்த டாஸ்மாக் ஊழியர்
x

அரசு மதுபான கடையில் சில்லறை கேட்ட மதுப்பிரியரை விற்பனையாளர் தாக்க முற்பட்ட வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் நாலாங்கட்டளை அருகே தீர்த்தாரபுரம் செல்லும் சாலையில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு மதுப்பிரியர் ஒருவர் 600 ரூபாய் கொடுத்து மது வாங்கியுள்ளார். அதில் 590 ரூபாய்க்கு மதுபானங்கள் வாங்கியது போக மீதி 10 ரூபாயை விற்பனையாளரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அதைத் தர மறுத்த விற்பனையாளர் செல்வம், சில்லறை கேட்ட மதுப்பிரியரை ஆபாசமாக திட்டி தாக்க முற்பட்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய செல்வம் ஏற்கனவே ஆலங்குளம் அருகே மதுக்கடையில் பணியாற்றும் போதும் சில்லறை கேட்ட மதுப்பிரியர் ஒருவரைக் கடுமையாக தாக்கியது குறிப்பிடத்தக்கது.




Next Story