சாலை பணியை அதிகாரிகள் குழு ஆய்வு


சாலை பணியை அதிகாரிகள் குழு ஆய்வு
x
தினத்தந்தி 16 May 2023 1:30 AM IST (Updated: 16 May 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

தொட்டபெட்டா-இடுஹட்டி இடையே சாலை பணியை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது..

நீலகிரி

ஊட்டி

தொட்டபெட்டா-இடுஹட்டி இடையே சாலை பணியை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது..

அதிகாரிகள் குழு

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் சாலை மற்றும் பாலம் கட்டுமான பணிகள் தொடர்பாக உள்தணிக்கை குழு அமைத்து ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அதன்படி ஊட்டி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையில் கோவை உதவி கோட்ட பொறியாளர்(திட்டங்கள்) உமா சுந்தரி மற்றும் உதவி பொறியாளர்கள் விக்னேஷ்ராம், ஸ்ரீபிரியா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

ஆய்வு

இந்த நிலையில் ஊட்டியை அடுத்த தொட்டபெட்டாவில் இருந்து இடுஹட்டி செல்லும் சாலையில் தும்மனட்டி, டி.மணிகட்டி பகுதியில் நடந்து முடிந்துள்ள சாலை பணிகள் குறித்து ஆய்வு நடந்தது. அப்போது சாலையின் தரம் உறுதி தன்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன. மேலும் எத்தனை சாலையின் உயரம் கன சென்டி மீட்டர் உள்ளது என்பது குறித்து பதிவு செய்யப்பட்டது. இதில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா? என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் குழந்தைராஜூ, உதவி கோட்ட பொறியாளர் ஜெயபிரகாஷ், உதவி பொறியாளர் ஸ்டாலின் மற்றும் ஊட்டி தரக்கட்டுப்பாட்டு உதவி பொறியாளர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story