அரசு வீடு கட்டி தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்ணீர்மல்க பெண் மனு


அரசு வீடு கட்டி தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்ணீர்மல்க பெண் மனு
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு வீடு கட்டி தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்ணீர்மல்க பெண் மனு அளித்தார்.

கடலூர்

சிதம்பரம் அருகே சி.மானம்பாடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் குமார் மனைவி மாரியம்மாள். இவர் நேற்று தனது குழந்தைகளுடன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து கண்ணீர் மல்க புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

இருளர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த எனக்கு 5 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் குடிசை வீட்டில் வசித்து வந்த என்னிடம், சி.மானம்பாடியை சேர்ந்த ஒருவர் அரசு வீடு கட்டி தருவதாக கூறி இருதவணைகளாக மொத்தம் ரூ.70 ஆயிரம் பெற்றுக் கொண்டார். அதன்படி எங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த நபர், எங்களுக்கு வீடு வழங்க விடாமல் தடுத்து, வேறு நபருக்கு ஒதுக்கிவிட்டார். மேலும் குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றையும் பறித்துக் கொண்டார். இதனால் ரேஷன் கடையில் அரிசி கூட வாங்க முடியாமல், தற்போது எம்.ஜி.ஆர். திட்டில் ஆற்றின் ஓரம் குடிசை போட்டு வசித்து வருகிறோம். அதனால் பணத்தை பெற்று மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story