வாலிபர் மரத்தில் ஏறி தற்கொலை முயற்சி


வாலிபர் மரத்தில் ஏறி தற்கொலை முயற்சி
x

நிலத்தை சரியாக அளந்து கொடுக்க வலியுறுத்தி வாலிபர் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு அண்ணா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவருக்கு சொந்தமான நிலத்தை சரியான முறையில் அளந்து கொடுக்கவில்லை என்று கூறி இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தாலுகா அலுவலகத்தில் உள்ள வேப்ப மரத்தின் மீது ஏறி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதாக கூறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விைரந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர் நிலத்தை சரியாக அளந்து கொடுக்கும் வரை கீழே இறங்க மாட்டேன் என்று கூறினார். இதையடுத்து அவரது பெற்றோர், உறவினர்கள் வந்து அவரிடம் பேசினர்.

அதன்பின்னர் பகல் 11 மணி அளவில் அவர் மரத்தில் இருந்து கீழே இறங்கி வீட்டுக்கு சென்றார்.

இந்த சம்பவத்தால் சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story