வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

கீரமங்கலம் அருகே உள்ள நெய்வத்தளி கிராமம் ராம்ஜி நகரை சேர்ந்தவர் பரிமளராஜன், கூலிதொழிலாளி. இவருடைய மகன் பிரபாகரன் (வயது 21). சம்பவத்தன்று பரிமளராஜன் வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது பிரபாகரன் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அப்போது அவரிடம் விசாரித்த போது வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்ததாக கூறினார். இதையடுத்து அவரை மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரபாகரன் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story