மரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
புதுப்பேட்டை அருகே மரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை அருகே உள்ள பண்டரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவரது மகன் பவுன்ராஜ் (வயது 26). திருமணமாகவில்லை. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால், அடிக்கடி பவுன்ராஜ் மதுகுடித்து விட்டு, வீட்டில் உள்ளவா்களிடம் பிரச்சினை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் வீட்டில் தாகராறில் ஈடுபட்டுள்ளார்.
தற்கொலை
பின்னர், கோபித்துக்கொண்டு வீட்டை வெளியே சென்றவர், அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, புவுன்ராஜ் உடலை கைப்பற்றி, பிரேத பிரிசோதனைக்காக, பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புவுன்ராஜ் அண்ணன் சிவராஜ் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.