ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
சிதம்பரத்தில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர்
சிதம்பரம்,
சிதம்பரம் வல்லம் படுகை ரெயில்வே பாலத்தில் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் ரெயில்வே இருப்பு பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அந்த வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story