ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
ஸ்ரீரங்கத்தில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீரங்கத்தில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ரெயில் முன் பாய்ந்தார்
திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலையில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. அந்த ரெயில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம், டவுன் ரெயில் நிலையத்திற்கு இடையே உள்ள ரெயில் பாதையில் சென்றபோது, திடீரென்று 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென்று ரெயில் முன் பாய்ந்தார்.
இதில் அவர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் சிவப்பு நிற டி சர்ட்டும், பச்சை நிற வேட்டியும் அணிந்திருந்தார். வலது கையில் என்.எஸ் என்று பச்சை குத்தி உள்ளார். மேலும் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் எனவும் தெரியவில்லை.
விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.