ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
மயிலம் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்
மயிலம்,
மயிலம் அருகே நல்லாமூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் பூவரசன் (வயது 22). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு பூவரசன் வந்தார். இந்த நிலையில் நேற்று காலை இவர் தென்பசார் ரெயில்வே கேட் அருகே சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பயணிகள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்த தகவலின் பேரில் திண்டிவனம் ரெயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பூவரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பூவரசன் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story