ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு
திருமங்கலத்தில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் இறந்தார்.
மதுரை
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே மறவன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் நெல்லை அதிவிரைவு ரெயில் வந்து கொண்டிருந்தது, அப்போது 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் நேற்று காலை இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திருமங்கலம் அருகே உள்ள சுந்தரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் (வயது 19) என தெரிய வந்தது. மேலும் வாலிபர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முற்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என மதுரை ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story