மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி


மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
x

தென்தாமரைகுளம் அருகே மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்:

தென்தாமரைகுளம் அருகே மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்.

வாலிபர்

தென்தாமரைகுளம் அருேக உள்ள வாத்தியார்விளை அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன். இவருடைய மகன் சுதர்சன் (வயது 28). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் மின்வாரியத்தில் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வரும் ஒரு ஒப்பந்ததாரரிடம் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று தென்தாமரைகுளம் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.

தவறி விழுந்தார்

அதன்படி தென்தாமரைகுளம் அருகே உள்ள புன்னையடியில் சுதர்சன் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் மின்கம்பத்தில் ஏறி பராமரிப்பு பணிகளை முடித்து விட்டு இறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக சுதர்சன் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக கொட்டாரம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சுதர்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சோகம்

பின்னர், சுதர்சனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story