மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி


மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி
x

ஜோலார்பேட்டை அருகே திருப்பதி கோவிலுக்கு சென்ற வாலிபர் மோட்டார்சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்து பலியானார்.

திருப்பத்தூர்

பள்ளத்தில் வாலிபர் பிணம்

ஜோலார்பேட்டையை அடுத்த குடியானகுப்பம் பகுதியில் ரெயில்வே மேம்பால பணிக்காக பில்லர் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேதுக்கரசன் மற்றும் போலீசார் சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பதி கோவிலுக்கு

மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்து கிடந்த வாலிபர் நாட்டறம்பள்ளி அருகே உள்ள அக்ரகாரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் வினோத்குமார் (வயது 29) என்பது தெரியவந்தது. இவர் டிப்ளமோ படித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு திருப்பதி கோவிலுக்கு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது குடியானகுப்பம் ரெயில்வே கேட் பகுதியில் ரெயில்வே மேம்பால பணிக்கு பில்லர் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து வினோத் குமாரின் தந்தை ஜெயராமன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story