கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு


கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு
x
தினத்தந்தி 17 Jun 2023 1:45 AM IST (Updated: 17 Jun 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்தார்.

மதுரை

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரை அடுத்துள்ள காமராஜர் நகரை சேர்ந்த ஈஸ்வரன் மகன் பெரியகருப்பன் (வயது 20). இவர் தனது தோட்டத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் மோட்டாரை பழுது பார்க்க இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். கிணற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால் பாறையில் மோதி தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பெரியகருப்பன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story