சாலை விபத்தில் வாலிபர் பலி
சாலை விபத்தில் வாலிபர் பலியானார்.
சாலை விபத்தில் வாலிபர் பலியானார்.
வேலூர் சலவன்பேட்டை சுந்தரமூர்த்தி கோவில்தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் பாலாஜி (வயது 34). இவர் நேற்று மோட்டார்சைக்கிளில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்துல்லாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த வழியாக சென்ற காரில் அடிபட்டு காயமடைந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் கூறுகையில், பாலாஜி எவ்வாறு விபத்தில் சிக்கினார் என்பது தெரியவில்லை. காரில் அடிப்பட்டுள்ளார். மோட்டார்சைக்கிளில் சென்றபோது நிலை தடுமாறி கிழே விழுந்து, பின்னர் கார் அவர் மீது மோதி இருக்கலாம். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.