விபத்தில் வாலிபர் பலி


விபத்தில் வாலிபர் பலி
x

விருதுநகர் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

விருதுநகர்


விருதுநகர் அனுமன் நகரை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 32). இவரது மனைவி தனலட்சுமி (29). முனீஸ்வரன் இருசக்கர வாகன ஓர்க் ஷாப் வைத்து நடத்தி வந்தார். இந்தநிலையில் வீட்டுச்செலவுக்கு பணம் கொடுக்காமல் மனைவியுடன் பிரச்சினை செய்துவிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி பாலவனநத்தத்தில் உள்ள இருசக்கர வாகன ஓர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த அவர் விருதுநகர் அருப்புக்கோட்டை ரோட்டில் வாகனத்திலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Related Tags :
Next Story