விபத்தில் வாலிபர் பலி
சிவகாசி அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.
சிவகாசி,
சிவகாசி விஸ்வநத்தம் ரோட்டில் வசித்து வருபவர் மாரியப்பன் மகன் முனியப்பன் (வயது 30). இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சம்பவத்தன்று சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முனியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், முனியப்பன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். முனியப்பன் மோதிய வாகனத்தில் வந்து கொண்டிருந்த முதலிப்பட்டியை சேர்ந்த பூமாரி, அவரது மகன் நிதீஷ்குமார் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.