உசிலம்பட்டி அருகே மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் மின்மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் மின்மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வாலிபர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது அம்மமுத்தன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சிவரஞ்சன் (வயது 32). இளங்கலை பட்டதாரியான இவர் வேலைக்கு முயற்சித்து கொண்டே விவசாய பணிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம் போல் தனது தோட்டத்தில் மோட்டாரை இயக்க சென்ற போது மின் சாதன பெட்டியில் நேற்றுமுன்தினம் பெய்த மழையின் காரணமாக மின் கசிவு இருந்துள்ளது.
மின்சாரம் தாக்கி
இதனை கவனிக்காத சிவரஞ்சன் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எழுமலை போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.