மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி
x

கீழையூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

கீழையூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கார் மோதியது

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் காரைநகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவருடைய மகன் பூபதி (வயது27).இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வேளாங்கண்ணியில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.பிரதாபராமபுரம் வந்தபோது எதிரே திருத்துறைப்பூண்டியில் இருந்து காரைக்காலை நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் தூக்கி வீசப்பட்டு பூபதி படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூபதி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story