சரக்கு வேன் மோதி வாலிபர் சாவு
ராயக்கோட்டை:-
ராயக்கோட்டை அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
தனியார் நிறுவன ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரகமத்காலனியை சேர்ந்த வெங்கட்டேஷ் மகன் ஸ்ரீநாத் (வயது 21). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று மதியம் ராயக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது உள்ளு குறுக்கை அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஸ்ரீநாத் மீது மோதியது.
சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீநாத் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஸ்ரீநாத் பரிதாபமாக இறந்து விட்டார்.
விபத்தில் இறந்த ஸ்ரீநாத் உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதுதொடர்பாக ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.