ரெயில்வே தண்டவாள பகுதியில் பிணமாக கிடந்த வாலிபர்


ரெயில்வே தண்டவாள பகுதியில் பிணமாக கிடந்த வாலிபர்
x

ரெயில்வே தண்டவாள பகுதியில் வாலிபர் பிணமாக கிடந்தார்.

கரூர்

குளித்தலையில் உள்ள ரெயில் நிலையம்-மணப்பாறை சாலையில் உள்ள ரெயில்வேகேட்டின் இடைப்பட்ட தண்டவாளம் பகுதியில் வாலிபா் ஒருவா் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தண்டவாளத்தின் அருகே கிடந்த செல்போன் ஒன்றை கைப்பற்றி அதில் இருந்த நம்பர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதில், இறந்து கிடந்தவர் திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் சங்கர் (வயது 35) என்பதும், இவர் மீது திருச்சி மாவட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story