கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்
கும்பகோணத்தில் கிணற்றில் மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடந்தார். அவரை கொலை செய்து உடலை வீசி சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் கிணற்றில் மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடந்தார். அவரை கொலை செய்து உடலை வீசி சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகேஸ்வரன் கோவில்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் முக்கியமான பகுதி நாகேஸ்வரன் கோவில் தெற்கு வீதி ஆகும். இங்கு 50-க்கும் மேற்பட்ட கடைகள், ஓட்டல்கள், திருமண மண்டபம் ஆகியவை உள்ளன.
இப்பகுதிக்கு மிக அருகில் புகழ்பெற்ற நாகேஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தெற்கு வீதியில் பாதாள காளியம்மன் கோவில் பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது.
பிணமாக கிடந்த வாலிபர்
இந்த கிணற்றில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு அடையாளம் தெரியாத வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணம் கிடந்த கிணற்றை பார்வையிட்டனர். பின்னர், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் 20 அடி ஆழமுள்ள கிணற்றில் நவீன ஏணி மூலம் கீழே இறங்கி வாலிபரின் உடலை மீட்டனர்.
கொலை செய்யப்பட்டாரா?
இதையடுத்து உடலை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மமான முறையில் இருந்து கிடந்த வாலிபர் யார்?, அவர் எந்த ஊரை சேர்ந்தவர்?, அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நடமாடும் பகுதியில் உள்ள கிணற்றில் வாலிபர் ஒரு மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.