மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் படுகாயம்
x

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.

கரூர்

கரூர் மாவட்டம், அத்திப்பாளையம் செல்வநகர் பகுதியை சேர்ந்தவர் ரஜினி (வயது 31). இவர் தனது நண்பர்களுடன் வாங்கல் பசுபதிபாளையத்தில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். பண்டுதக்காரன்புதூர் பிரிவு சாலை அருகே வந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த ஒரு வாகனம் ரஜினி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரஜினி படுகாயம் அடைந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்த அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ரஜினியின் மனைவி கவுசல்யா கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story