கிரிப்டோ கரன்சியில் முதலீடு குறுந்தகவலை நம்பி ஆன்லைனில் ரூ.18 லட்சத்தை இழந்த வாலிபர்


கிரிப்டோ கரன்சியில் முதலீடு குறுந்தகவலை நம்பி ஆன்லைனில் ரூ.18 லட்சத்தை இழந்த வாலிபர்
x

கிரிப்டோ கரன்சியில் முதலீடு குறுந்தகவலை நம்பி ஆன்லைனில் ரூ.18 லட்சத்தை இழந்த வாலிபர் கொடுத்த புகாரின் பேரில் மோசடி வழக்குப்பதிவு செய்து சேலம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 22). இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிகளவு பணம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இதை நம்பி பார்த்திபன் அந்த குறுந்தகவலில் கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்து விவரங்களை பார்த்துள்ளார்.

பின்னர் அதில் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ரூ.18 லட்சம் முதலீடு செய்தார். பின்னர் பணம் கட்டியதற்கான ரசீது ஏதும் அவருக்கு வரவில்லை. மேலும் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பார்த்திபன் இதுகுறித்து சேலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.18 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story