போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தீக்குளிப்பு
வாணியம்பாடியில் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடியில் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுமியை கடத்தி திருமணம்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சி.எல்.காலனி பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 21). இவர் கடந்த 14-ந் தேதி அதேப் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், திருநாவுக்கரசு மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தீக்குளிப்பு
இதை அறிந்த திருநாவுக்கரசு போலீஸ் விசாரணைக்கு பயந்து நேற்று அவரது வீட்டில் தீக்குளித்தார். இதில் தீக்காயம் அடைந்த அவரை உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.