பெட்ரோலை ஊற்றி தற்கொைலக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு


பெட்ரோலை ஊற்றி தற்கொைலக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு
x

பெட்ரோலை ஊற்றி தற்கொைலக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு

தஞ்சாவூர்

பேராவூரணி

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டது.

செல்போன் கோபுரம் அமைக்கும் பணி

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட நாட்டாணிக்கோட்டை பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்க முடிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை அந்த தனியார் நிறுவனம் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பு அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்கொலைக்கு முயற்சி

நேற்று தனியார் நிறுவனத்தினர் செல்போன் அமைக்கும் பணியை தொடங்கினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் செல்போன் கோபுரம் பணியை தொடங்கக்கூடாது என வலியுறுத்தியும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவீந்திரன் கையில் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story