கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது


கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
x

வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 25), தொழிலாளி. இவர் கோட்டை சுற்றுச்சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி யுவராஜ் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த 1,000 ரூபாயை பறித்து சென்றார்.

இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் யுவராஜிடம் பணம் பறித்தது சைதாப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story