கூடலூரில் இளம்பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது


கூடலூரில் இளம்பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் இளம்பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

ஊட்டி

கூடலூரில் இளம்பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மனைவியை பிரிந்தவர்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தர்மகிரி பகுதியை சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்தார். இதனால் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார்.

இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவரின் நடவடிக்கையில் பெரிய மாறுபாடுகள் ஏற்பட்டதால் அவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் கேரளாவில் தங்கி பணியாற்றிக் கொண்டும், வார விடுமுறை நாட்களில் நீலகிரிக்கு வந்து தனது தாயாருடன் தங்கி இருந்துள்ளார். இதனால் இவர்களது குழந்தை அந்த பகுதியில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறது.

புகைப்படம் சித்தரிப்பு

இதற்கிடையே விடுமுறை நாட்களில் கூடலூருக்கு வந்த அவர் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிட்டு வந்து உள்ளார். அப்போது அவர் சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் இளம் பெண்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த இளம் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக் மூலமாக தனது நண்பர்களுக்கு அனுப்பி வந்து உள்ளார். மேலும் அந்த புகைப்படங்கள் முழுவதும் தனியாக தனது செல்போனில் சேமித்து வைத்து உள்ளார்.

இந்த நிலையில் இவரது நண்பர் ஒருவர் ஏன் இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுகிறாய் என்று இது குறித்து கேள்வி கேட்டபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், இந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்வது விடுவதாக அவரது நண்பருக்கு மிரட்டல் விடுத்து உள்ளார்.

கைது

இந்தநிலையில் அவரது நண்பர் இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதன் பின்னர் தகவல் தொழில்நுட்ப சட்டம் 67- மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 506 (1) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். மேலும் ஆபாச படங்கள் அடங்கிய அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் பின்னர் அவரை ஊட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


பெற்றத்தாயின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரிப்பு

கேரளாவில் ஓட்டலில் பணியாற்றி வந்த அந்த வாலிபர், மனைவியை பிரிந்த பின்னர் தனிமையில் இருந்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் நீண்ட நேரத்தை சமூக வலைதளத்தில் செலவழித்து வந்து உள்ளார். ஒரு கட்டத்தில் பெற்ற தாயின் புகைப்படத்தையே ஆபாசமாக சித்தரித்து அதையும் சமூக வலைத்தளம் மூலமாக குறிப்பிட்ட நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளார்.

முன்னதாக அவரின், தாயார் 2-வது திருமணம் செய்து கொண்டு, தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். ஒருவேளை தாயார் 2-வது திருமணம் செய்த ஆத்திரத்தில் அவ்வாறு செயல்பட்டு விட்டாரா? அல்லது வேறு மனநல பாதிப்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story